பிக்பாஸ்

பிக்பாஸ் முடிந்தும் அடங்கமறுக்கும் கவின் ஆர்மி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் அவ்வப்போது கவின் குறித்த ஹேஷ்டேக்கை அவரது ஆர்மியினர் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் முகின் ராவ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

இரண்டாவது இடத்தை நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் பெற்றார்.

நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே பலமுறை நாமினேட் செய்யப்பட்ட கவினுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வந்தனர்.

அவருக்கு இருக்கும் ரசிகர்களைப் பார்த்து சக போட்டியாளர்களும் மிரண்டு போனார்கள்.

படிக்க:
கவின்-லாஸ்லியா காதல் உண்மையா.. இறுதியில் முற்றுப்புள்ளி வைத்த லாஸ்லியாவின் தோழிகள்

இறுதியாக பிக்பாஸ் கொடுத்த ரூ.5 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு கவின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போது நட்புக்காக கவின் அப்படி செய்ததாக அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

அதிக முறை நாமினேட் செய்யப்பட்டு அதிக வாக்குகளைப் பெற்ற கவினுக்கு இறுதியாக நிகழ்ச்சியின் கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி இறுதி நாள் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், கவின் இருந்திருந்தால் ரிசல்ட் வேறு மாதிரி இருந்திருக்கும் என்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் அவ்வப்போது கவின் ஆர்மி, ஏதோ ஒரு காரணத்துக்காக அவரது பெயரை ட்ரெண்டாக்கி வருகின்றனர். கவின் – லாஸ்லியா காதலுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி சேரன் மீது கவின் ஆர்மி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தது.

அதற்கு விளக்கமளித்த இயக்குநர் சேரன், “இனி கவின் – லாஸ் பெயரே என் நாவில் வராது. என் பிரச்னைக்கு இனி யாரும் வர வேண்டாம்” என்றார்.

மேலும் பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது கவின் நடனமாடிய வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது #KavinTimetoShine என்ற ஹேஷ்டேக்கை கவின் ஆர்மி இன்று காலை முதலே ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

படிக்க:
பிக் பாஸ் – 3 கசப்பா ? கவின் – லாஸ்லியா பெயர்’ என் நாவில் வராது – இயக்குநர் சேரன் டுவீட்

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …