கவின்

அம்மாவிடம் லாஸ் கேட்ட கேள்வி, சோகத்தில் கவின்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கோலாகலமாக நிறைவேறியது.

கடந்த இரண்டு சீசன்களை விட சமீபத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது சீசன் மக்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்றது.

ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைய முக்கிய காரணம் இந்த சீசனில் நடைபெற்ற பல்வேறு காதல்கள் மற்றும் சர்ச்சைகள் தான் காரணம்.

17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடைபெற்றது.

அதில் குறிப்பாக மதுமிதாவின் வெளியேற்றம், சரவணனின் வெளியேற்றம், கவினின் வெளியேற்றம், தர்ஷனின் வெளியேற்றும் முகென் மற்றும் அபிராமி இடையேயான சண்டை, லாஸ்லியா பெற்றோர்கள் வீட்டுக்குள் சென்ற எபிசோடு என்று பல்வேறு எபிசோடுகள் சுவாரசியமாகவும் சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டங்கள் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாக இருக்கிறது.

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் மீராமிதுன், ரேஷ்மா, சரவணன், மதுமிதா ஆகியோர் பங்கு பெறவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் முக்கியமாக கூற வேண்டுமென்றால் லாஸ்லியாவின் சகோதரிகள் லாஸ்லியா தான் எங்களுக்கு அம்மா என்று கூறி இருந்தார்கள்.

அதற்கு லாஸ்லியாவும் இவர்கள் இருவரும் எனது குழந்தையை போல என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

கவின்

கவின்

கவின்

கவின்

மேலும், லாஸ்லியாவின் அம்மா பேசும்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் அவள் என்னிடம் ஒரே ஒரு விஷயத்தை தான் கேட்டால் அது பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது என்னை நம்பாமல் நீங்கள் எதற்காக என்னிடம் அப்படி பேசினீர்கள் என்று கேட்டாள்.

அதற்கு நான் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இப்போது அவளை நான் முழுமையாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார் லாஸ்லியாவின் அம்மா.

மேலும், வழக்கம்போல சாண்டி போட்டியாளர்களை கிண்டலடித்து நடனமாடியுள்ளார் அதில்சேரனை தான் மிகவும் கேலி செய்துள்ளார் சாண்டி.

இதனால் சேரனுக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஆரம்பம் முதலே சேரன், லாஸ்லியாவிடம் அவ்வளவாக பேசவும் இல்லை.

சேரன் நிகழ்ச்சியில் இருந்து வெளியே செல்லும் போது லாஸ்லியாவிடம் எதுவும் கூறாமல் விடை பெற்றுள்ளார்.

இதிலிருந்து சேரன் மற்றும் லாஸ்லியா ஒரு இடைவெளியுடன் இருப்பது நன்றாக தெரிகிறது.

அதேபோல பிக்பாஸ் வீட்டில் மிகவும் பிரபலமாக இருந்த வி ஆர் தி பாய்ஸ் குழு பேசும்போது கவின், லாஸ்லியா குறித்துபேசினார்.

அப்போது கவினிடமிருந்து மைக்கைப் பிடுங்கிய சாண்டி, கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது எனக்கு அவன் மீது மிகுந்த கோபம் வந்தது.

ஆனால், அவனுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணி தற்போது நான் சந்தோஷப்படுகிறேன் என்று கூறினார்.

அதேபோல பிக்பாஸ் கொண்டாட்டத்தில் இருந்த ரசிகர்கள் கவினுக்கு மிகுந்த ஆதரவையும் உற்சாகத்தையும் அளித்துள்ளார்கள்.

கவின் என்ன பேசினாலும் அரங்கத்தில் அப்படி ஒரு கைத்தட்டல் கேட்டது. ஒருகட்டத்தில் கவணிடம், கோபிநாத் பேசிக்கொண்டிருக்கும்போது ரசிகர்கள் தொடர்ந்து கைதட்டிக் கொண்டே இருந்தார்கள்.

இதனால் கோபிநாத், கவினிடம் வெளியில் இருந்து கூட்டிக்கொண்டு வந்து விட்டாயா என்று கூறினார்.

இதனால் கவின் கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று ரசிகர்களை பார்த்து சைகை செய்தார்.

இருப்பினும் அதற்கும் ரசிகர்கள் தட்டி ஆரவாரம் செய்ததால் அமைதியாக இருக்கச் சொல்கிறாயா இல்லை மேலும், சத்தம் போட சொல்கிறாயா என்று கவினிடம் மிகவும் ஜாலியாக கேட்டார்.

இப்படி கவின் சந்தோசமாக இருந்தாலும், பிக் பாஸ் கொண்டாட்டத்தின் இறுதியில் யார் முகத்திலும் ஒரு சந்தோஷம் இல்லை.

அதிலும் கவின் மிகவும் சோகத்துடனே காணப்பட்டார். இப்படி பிக்பாஸ் கொண்டாட்டத்தில் பல்வேறு சந்தோஷமான தருணங்கள் சோகமான தருணங்களும் நடைபெற்றது.

இதையும் பாருங்க :

பிக் பாஸ் – 3 கசப்பா ? கவின் – லாஸ்லியா பெயர்’ என் நாவில் வராது – இயக்குநர் சேரன் டுவீட்

பதற்றமான 146 வாக்குசாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: நாளை

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …