அதிமுக தேமுதிக

உறுதியான அதிமுக – தேமுதிக கூட்டணி?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அதிமுக தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாக உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆனால் தேமுதிகவின் கூட்டணி முடிவு தான் இழுபறியில் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் முன்னிலையில் அதிமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக தெரிகிறது.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …