விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் (அக்டோபர் 6) நிறுவடைந்தது. 16 போட்டியாலர்கள் கலந்த கொண்ட இந்த நிகழ்ச்சியில் 12 வெளியேற்றபட்ட நிலையில் முகென்,சாண்டி,லாஸ்லியா, ஷெரின் என்று 4 போட்டியாளர்கள் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த சீசனில் வெளிநாட்டில் இருந்து மூன்று போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் மலேசியாவை சேர்ந்த முகென் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷனும் அதில் அடக்கம். இதில் லாஸ் லியா பல்வேறு இளசுகளின் உள்ளதை கொலைகொண்டார். இவரது அழகான தோற்றம் காரணமாக இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்திலேயே இவருக்கு சமூகவலைதளத்தில் ஆர்மிக்கால் கூட உருவானது.
ஆரம்பத்தில் யாரிடமும் அவ்வளவாக பேசாத லாஸ்லியா ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரது உண்மையான குணம் வெளியே வரத் தொடங்கியது. பிக்பாஸ் வீட்டில் இவர் சேரனை தனது தந்தையை போல பாவித்து நடந்து வந்தார். மேலும், சேரனுக்கு அடுத்தபடியாக கவினிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார்.
இவர் இதுவரை பெரிய சர்ச்சையில் சிக்க வில்லை என்றாலும் இவருக்கு சாக்க்ஷிக்கும் கவின் விஷயத்தில் கொஞ்சம் முட்டிக்கொண்டது கொண்டது ஆனால் இவருக்கு உறுதுணையாக கவின் எப்போதும் இருந்துவந்தார்.
அதேபோல கவின் விஷயத்தில் யாராவது குறை சொன்னால் உடனே பொங்கி விழுந்து விடுவார் அந்த வகையில் மதுமிதா கவின் குறித்து பேசியபோது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் லாஸ்லியா. அப்போதுதான் லாஸ்லியாவின் மற்றுமொரு முகத்தை ரசிகர்களும் கண்டனர் .மேலும், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெரும்பாலான போட்டியாளர்கள் இவரை பட்டாம்பூச்சி போல் பாவித்து வந்தனர்.
மேலும் , வி ஆர் த பாய்ஸ் கேங்கில் இருந்த ஒரே பெண் போட்டியாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வந்தாலும் அதனை பெரிதாக பொருட்படுத்தாமல் எப்போதும் கவினை விட்டுக்கொடுக்காமல் இருந்த வந்தார் மேலும், இவரது பெற்றோர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தபோது கவின் விஷயத்தில் இவரது தந்தை இவரை கடுமையாக திட்டித் தீர்த்தார்.
ஒரு கட்டத்தில் தன்னால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என்று இருந்து வெளியேறிய பல முறை அழுது புலம்பினார். இத்தனை தடைகளையும் தாண்டி தற்போது லாஸ்லியா இறுதி போட்டிக்கு நுழைந்தது பாராட்டுக்குரிய விஷயம் தான்.
இறுதி போட்டியில் இவர் கண்டிப்பாக பிடிக்கவில்லை என்றாலும் இரண்டாவது இடத்தை பிடித்து விடுவார் என்று இவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் மூன்றாம் இடத்தை பிடித்தார்.
இருப்பினும் இவர் இறுதி போட்டி வரை தகுதி வெற்றியாக தான் பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய லாஸ்லியா ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.