பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை இன்று ஹவுஸ்மேட்களிடம் கவின் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறார்.
அதாவது, போட்டியில் இறுதியில் வெற்றி பெறும் நபருக்கே ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும்.
அதற்கு முன்னர் ரூ.5 லட்சம் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் யார் இத்தொகையைப் பெற்றுக் கொண்டு இப்போதே வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு முதலாவதாக எழுந்த கவின் நான் இந்த தொகையை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், வார இறுதி என்பதால் இன்று கமலுடன் போட்டியாளர்கள் சந்திக்கும் நாள் இன்று. கவின் ஏன் இப்படி செஞ்சிட்டாரு? என்று நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் கவின் தான் பதில் சொல்லுவார் இன்று இரவு என்று கமல் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது நிகழ்ச்சி குழு 97-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில் கவினிடம் பேசும் கமல் நீங்கள் பணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறவில்லை என்று தெரிவிக்கிறார். இதற்கு அவரும் ஆமாம் என்பது போல தலையசைக்கிறார்.
இதனால், கவின் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு தான் உடனடியாக வெளியேறியதற்கான காரணத்தை அனைவரிடமும் இன்றைய நிகழ்ச்சியில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டில் கவினை நினைத்து அழும் லாஸ்லியா… தர்ஷன் கொடுத்த அட்வைஸ்…!