பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது.
இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும் டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் அனைவரும் போராடி வருகின்றனர்.
இதுவரை நடந்து முடிந்த டாஸ்கில் தற்போது வரை முகென் முதல் இடத்தில இருக்கிறார். அவரை தொடர்ந்து சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், லாஸ்லியா பின்னர் இறுதியாக கவின் இருக்கிறார்கள்.
எனவே, கடைசி மூன்று இடத்தில் இருப்பவர்களுக்கு இந்த டாஸ்கில் வெற்றி பெற வாய்பே இல்லை.
எனவே. முகென், சாண்டி, தர்ஷன், ஷெரின் ஆகியோருக்கு தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கபட்டது.
இந்த நிலையில் பிக் பாஸ் உதவியோடு கவின், கோல்டன் டிக்கெட்டை வென்றார் என்ற ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
தற்போது முகென் 38 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும், கவின் 18 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறார்.
கவின் ஏற்கனவே ஷெரின் மற்றும் சாண்டியின் தங்க முட்டைகளை உடைத்துள்ளார்.
எனவே, ஒரு முட்டைக்கு அவருக்கு 10 முதல் 15 புள்ளிகள் வழங்கபடலம் என்று கூறப்படுகிறது.
அப்படி நடந்தால் கவின் முகெனை விட அதிக புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் வரவும் வாய்ப்புகள் இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதலே கவினுக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறதோ அதே அளவு எதிர்ப்பும் இருந்து தான் வருகிறது.
இருப்பினும் கவின் விஜய் டிவி பிள்ளை என்பதால் தான் அவருக்கு பிக் பாஸ் ஆதரவு அளித்து வருகிறார் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கவின் இறுதி போட்டிக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வெல்வார் என்று நீங்கள் நினைகிறீர்களா என்று கமெண்டில் சொல்லுங்கள்.
ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்க போகிறது.! ஒருவருக்கு கனவு கலைய போகிறது.!