துரோகம்

கல்யாணம் ஆன ஒரே வாரத்தில் மனைவிக்கு துரோகம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கல்யாணமான முதல் வாரத்திலேயே தனது கணவரின் காதல் லீலைகளைக் கண்டுபிடித்த மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை திரிசூலத்தை சேர்ந்த அபின்ஷாவும் மனீஷாவும் 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஆனால் நாட்கள் கடந்தாலும் இருவரும் திருமணம் செய்துகொள்ளாலமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மனீஷா கர்ப்பமாகியுள்ளார்.

இதையறிந்த உறவினர்கள் இந்த ஜோடியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன் மனிஷாவின் வற்புறுத்தலால் இருவருக்கும் இடையே திருமணம் நடந்தள்ளது. கல்யாணம் ஆகி ஒரு சில நாட்களே ஆன நிலையில் மனீஷா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக மனிஷாவின் தந்தைக்கு அபின்ஷா தகவல் அளித்துள்ளார்.

இறுதிச்சடங்குக்கு வந்த உறவினர்கள் அபின்ஷா மேல் சந்தேகமடைந்து அவரது மொபைல் போனை சோதனை இட்டதில் அவருக்கு அனிதா என்ற பெண்ணோடு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையைக் கண்டுபிடித்ததால் தான் மனீஷாவைக் கொன்று தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அபின்ஷா மற்றும் அந்த பெண்ணுக்கு இடையிலான காதல் உரையாடல்களையும் கைப்பற்றியுள்ளியுள்ளனர்.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …