கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார்.
மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை டார்கெட் செய்து வருகிறார் வனிதா.
ஆனால் கவினை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருகிறார் சாக்க்ஷி.
https://twitter.com/i/status/1169497892060454912
நேற்றய நிகழ்ச்சியில் கூட கவின் ஒரு டாஸ்க்கின் போது எதோ சாக்க்ஷியிடம் பேச கடுப்பான சாக்க்ஷி ‘நீ எனக்கு சொல்லித்தர வேண்டியதில்லை.
அதற்கு உனக்கு தகுதியும் இல்லை என்று கூறியிருந்தார்.
இன்று ஒளிபரப்பான முதல் ப்ரோமவில் ஷெரினிடம் பேசிய வனிதா என் கண்ணுக்கு முன்னாடி ஒரு affiar நடந்துட்டு இருக்கு (அதாவது கள்ளத்தொடர்பு ) என்று கூறியதால் கடுப்பான ஷெரின், என் உறவை பற்றி இப்படி பேச உனக்கு என்ன தைரியம்.
என்னை பற்றி பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை என்று கோபத்தில் கத்தினார்.
இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கவின், லாஸ்லியா, சேரன், முகென், ஷெரின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் கவினுக்கு தான் தற்போது வரை அதிக வாக்குகள் இருந்து வருகிறது. மேலும், ஷெரினுக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது.