முகென் ராவ்

பிக் பாஸில் கலந்துகொண்டதால் முகெனுக்கு பல்கலை கழகம் அறிவித்த விருது.!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதில் முகென், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் அடக்கம். இதில் முகென் ராவ் தமிழ் ரசிகர்கள் சிலருக்கு தெரியவும் வாய்ப்பு இருகிறது.மலேசியாவை சேர்ந்த இவர், ஒரு ஹிப் ஹாப் பாடகராவார்.

இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவருக்கென்று மலேசியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

மேலும், இவர் தமிழிலும் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதே போல இவரது ஒரு சில ஆல்பம் பாடல்கள் இந்தியாவிலும் கொஞ்சம் பிரபலம் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் இவருக்கு மலேசியாவில் இருந்து பல்வேறு ஆதரவுகள் குவிந்து வருகிறது.

இவருக்கென்று மலேசிய மக்கள் பல்வேறு ஆர்மியை கூட சமூக வலைத்தளங்களில் துவங்கி இருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் சென்ற பிறகு இவருக்கு மலேசியாவில் மேலும் ஆதரவு கூடியுள்ளது.

இந்த நிலையில் மலேசிய mahsa பல்கலை கழகம் நடத்திய தேசம் மீடியா அச்சீவர் அவார்ட் அதாவது தேசம் ஊடக சாதனையாளர் விருது முகென் ராவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே முகென் ராவிற்கு இப்படி ஒரு பட்டம் கிடைத்துள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …