சேரன்

கவினை மாறி மாறி புகழ்ந்து தள்ளும் லாஸ்லியா-சேரன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் பிளேபாயாக ஆரம்பத்தில் வலம் வந்த கவின், அதன்பின்னர் ஒரு கட்டத்தில் அனைவரின் வெறுப்புக்கு ஆளானார்.

கமல்ஹாசன் கூட பெண்களின் உணர்வுகளில் விளையாடக்கூடாது என்று கவினை தட்டிக்கேட்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேறியுள்ள கவின் மீண்டும் லாஸ்லியாவுடன் நெருங்கி பழகி வருகிறார்
இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் சேரனும் லாஸ்லியாவும் மாறி மாறி கவினை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

தன்னுடைய கிராஃபில் கவின் உயர்ந்த இடத்தில் இருப்பதாக கூறும் சேரன், கவின் ஒருசில தவறுகள் செய்திருந்தாலும் அடிப்படையில் அவர் நல்லவர் என்று புகழ்கிறார்.

அதேபோல் லாஸ்லியா, கவின் குறித்து கூறியபோது, ‘கவினை தனக்கு ஏற்கனவே பிடிக்கும், தற்போது ரொம்ப பிடிக்கும் என்று கூறுவதோடு தனக்கு பக்கத்தில் இருப்பவர்களை தட்டிக்கொடுத்து தான் வெளியே போனாலும் பரவாயில்லை என்ற எண்ணம் தான் கவினின் உயர்ந்த எண்ணம் என்று கூறுகிறார்.

அப்பா, மகள் என இரண்டு பேர்களும் மாறி மாறி புகழ்வதை கவின் அமைதியாக புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

https://www.facebook.com/VijayTelevision/videos/754469981634385/

About அருள்

Check Also

பிக்பாஸ்

இரண்டு வருடம் கழித்து முதல் படத்தை வெளியிடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!21Sharesகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் திரையுலகில் ஆஹா ஓஹோ என்று …