கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2!

கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அதிகாலை விண்ணில் ஏவப்படவிருந்த சந்திரயான்-2 விண்கலம், வேறொரு நாளில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

உலக நாடுகளிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது.

அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருந்தது.

978 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, பாகுபலி என வர்ணிக்கப்படும் மார்க்-3 ஏவுகணை மூலம் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.

சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக காண குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்பட ஆயிரக்கணக்கானோர் அங்கு ஆவலோடு திரண்டிருந்தனர்.

இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில், அதாவது அதிகாலை 1.55 மணியளவில் கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.

ஏவுகணையில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு, கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவது நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் வேறொரு நாளில் ஏவப்படும் என தெரிவித்துள்ள இஸ்ரோ, ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

About அருள்

Check Also

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு - 13 பேர் பலி

இந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareஇந்தியாவில் 649 பேர் கொரோனா பாதிப்பு – 13 பேர் பலி இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 649 …