Breaking News
சிறுமியின்

சிறுமியின் வாயைப் பொத்தி சீரழித்த கொடூரன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (45) .இவர் ரயிலில் பொருட்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்திவருகிறார்.

இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு 14வயது ஆகிறது. ஆனால் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது, அருகில் வசிக்கும் ஷாயின் ஷா என்பவர் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளான்.

இதனையடுத்து கடும் வயிற்று வலியால் அந்த சிறுமி அவதியுற்றதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து எம்.கே.நகர் போலீஸ் ஸ்டேசனில் சிறுமியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

அதையடுத்து போக்ஸோ சட்டத்தில் ஷாயின் ஷா வை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது சிறுமி சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …