எரிபொருள்

எரிபொருள் விலை சூத்திர குழு இன்று கூடுகிறது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

எரிபொருள் விலை சீராக்கல் தொடர்பாக தீர்மானிப்பதற்காக, விலை சூத்திர குழு இன்று ஒன்றுகூடவுள்ளது.

நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவரது தகவல் பிரகாரம், இன்று மாலை 6 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

விலை சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 10ம் திகதி எரிபொருள் விலை புதுப்பிக்கப்படும்.

கடந்த மாதம் 10ம் திகதி மேற்கொள்ளப்பட்ட சீராக்கலின் படி, ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, லீற்றர் ஒன்று 135 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒக்டெய்ன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, லீற்றர் ஒன்று 164 ரூபாவாக நிலவுகிறது.

அதேநேரம், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 136 ரூபாவாக உயர்த்தப்பட்டதுடன், 104 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …