ஏப்ரல் 21 இல் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரத்திற்குள் அவரிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
இந்தக் குழு தனது இரண்டு இடைக்கால அறிக்கைகளை முன்னதாக ஜனாதிபதியிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.