மசாஜ் பார்லர்

மசாஜ் பார்லர் என்ற பெயரில் விபச்சாரம் – வேளச்சேரியில் ரெய்டில் சிக்கிய இருவர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வேளச்சேரி பேபி நகரில் வட இந்திய பெண்களைக் கொண்டு விபச்சாரத் தொழில் நடத்தி வந்த இரண்டு ஆண்களைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையின் மையப்பகுதிகளில் வீடுகளிலும், மசாஜ் பார்லர் என்ற பெயரிலும் விபச்சாரத் தொழில் மறைமுகமாக ஏகபோகமாக நடந்து கொண்டுதான் வருகிறது.

இந்த தொழிலில் வட இந்திய பெண்களே அதிகமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆன்லைன் மூலமாக ஆட்களைக் கவர்ந்து அதன் பின்னர் அவர்களுக்குத் தேவையான பெண்களை அளித்தும் இந்த தொழில் அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்று வேளச்சேரி பேபி நகர் பகுதியில் நடத்தப்பட்ட பிரபல மசாஜ் செண்டர் அதிகளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் நடமாட்டம் இருந்துள்ளது.

அதனால் அதன் அருகில் வசிக்கும் மக்கள் சந்தேகப்பட்டு புகார் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து போலிஸார் மாறுவேடத்தில் இரண்டு நாட்கள் அந்த பார்லைரைக் கண்காணித்துள்ளனர்.

சந்தேகத்தை உறுதி செய்து கொண்ட போலிஸார் ஒரு குழு அமைத்து பார்லருக்குள் வாடிக்கையாளர்கள் போல சென்று அங்கு பொறுப்பில் இருந்த சத்யா மற்றும் பிரவீன் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த பட்டிருந்த வட இந்திய பெண்கள் இருவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …