கண்டி போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று காலை சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நிலை வழமைக்கு திரும்பி வருவதன் காரணமாக இவ்வாறு அவர் சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனுடன் அத்துரலிய ரத்ன தேரருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏனையோரும், தற்போது சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த ரஜரட்ட நிபுணத்துவ தொழிலாளர்கள் ஒன்றியம்