ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி செய்தி..!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சுதந்திரத்தை பெற்றுக்கொண்டபோதும் பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடியாதிருப்பது, அரசாங்கதில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் காரணமாகவே என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்களை பிழையாக வழிநடத்தி சில ஊடகங்கள் மேற்கொண்டுவரும் போலிப் பிரச்சாரங்கள் குறித்து கவலை அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் குழப்பமான நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டிருப்பது குறுகிய நோக்கம் கொண்ட சந்தர்ப்பவாதிகளின் போலிப் பிரச்சாரங்களின் காரணத்தினாலேயாகும்.

நாட்டுக்காக ஊடகங்களுக்கும் முக்கிய பொறுப்புள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …