பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கடந்த ஏப்ரல் 8ம் திகதி சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகளின் கூட்டத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டதாக வௌியாகியுள்ள செய்தியை நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு அவ்வாறு எவ்வித அறிவிப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.