பயங்கரவாத தாக்குதலை அடுத்து சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும், இலங்கைக்கான சீன தூவருக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சுற்றுலாவைத் தவிர்க்குமாறு சீனா ஆரம்பத்தில் அறிவித்திருந்தது.
தற்பொழுது இலங்கைக்கான சுற்றுலாவின்போது அவதானத்துடன் செயற்படுமாறு சீனா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இலங்கை சுற்றுலாத் தொழில் துறைக்கு சிறந்ததொரு மேம்பாட்டு நடவடிக்கையாகும் என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.