” உன் நினைவிலே நான்….”
உன்னுடன் சேர்ந்தே
உயிர் வாழ்ந்திடவே
உனக்காகவே நானும்
உயிர் வாழ்கின்றேனே……
உன்னை நினைத்தே
உலகை மறந்தேனே
உன் இதய துடிப்பிலே
உணர்ந்தேன் என்னையே…..
உடலைவிட்டு எந்தன்
உயிர்கூட பிரிந்தாலும்
உண்மைக் காதலிங்கே
உறைந்து விடலாகாதே…..
உள்ளத்தின் வேதனையை
உள்ளத்தில் அடைத்திங்கே
உண்மையான அன்பினாலே
உன்னிதழிலே பூக்கின்றாயே…..
உன்மீது காதலினால்
உயிராக நானிருந்தே
உன்னதமான உறவாகவே
உறங்கிடுவேன் பாரினிலே…..
உன்னதம் ஆனதே
உத்தமம் ஆகுதே
உண்மை அன்பொன்றே
உலகில் நிரந்தரமானதே…..
கவிஞர் த. வினோத்.
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.