கல்கிஸ்ஸை பகுதியில் ஆயுர்வேத தசை பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட இரண்டு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு எட்டு பெண்களும், ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள இந்த பெண்கள்,மொரட்டுவை,கருவலகஸ்வெவ,கதிர்காமம்,பாதுக்கை,சாலியவெவ மற்றும் பண்டாரவளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நபர்,புத்தளம் பகுதியை சேர்ந்தவருடன்,அவர்கள் இன்றைய தினம் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.