உயிரில் கலந்த வலியின் சுகங்கள்
*************************************
அன்பு கொண்ட அழகான சிறு குடும்பத்திலே ஐந்து பிள்ளைகளில் முதலாவது மகளாக பிறந்த கருமை அழகியே எம் கதையின் நாயகி ஜெறோசி. அவள் அனைவர் மீதும் அன்பாக இருப்பவள் .
வறுமையான குடும்பம் என்பதினால் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையுடன் இணைந்து தானும் பல வேலைகளை செய்து கஷ்டப்பட்டே தனது கல்வியை தொடர்ந்த வண்ணம் தனது இரு சகோதரர்களையும் இரு சகோதரிகளையும் அன்புடனே கட்டுப்பாட்டுடன் வளர்த்து வந்தாள்.
தனது வாழ்வில் இன்பம் என்பதை விட துன்பத்தை அழகாய் கண்டே அன்பான குடும்பத்தின் அரவணைப்புடன் மகிழ்வாய் குடும்ப வாழ்க்கை சென்று கொண்டிருக்கையிலே அவள் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிக்காக சைக்கிள் ஓட்ட போட்டிக்கு தயாராகிறாள். அவளுடைய தந்தையும் அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கின்றார்.
இவ்வாறு பல பயிற்சிகளை செய்து போட்டியிலும் வெற்றியடைந்த அவள் தனது அடுத்த கட்ட போட்டிக்கு தயாராகின்றாள்
இந்த வேளையிலே இக் கதையின் நாயகன்க கிருஸ்வின் தனது தந்தையின் நண்பரான கதாநாயகியின் தந்தையிடம் வந்து வேலை காரணமாக அங்கே தங்குவதற்கு அனுமதி பெற்று வீட்டிலேயே தங்கி அக்குடும்பத்தில் ஒருவனாகவே வாழ்ந்து வருகின்றான்.
அங்கு அனைவருமே கிருஸ்வினை சகோதரனாகவே பார்த்து வரும் வேளையில் நாயகனும் அவ்வாறே அனைவரையும் எண்ணி உறவு கொண்டே வருகின்றான் இவ்வாறு நாட்கள் போகையிலே நாயகிக்கான சைக்கிள் ஓட்ட மாகாண மட்ட போட்டிக்காக நாயகி பாடசாலை செல்கின்றாள் அப்போது அவளை வீழ்த்த பலர் சதித் திட்டம் இடுகின்றனர்.
வலிகள் தொடரும்………..
நன்றி
பாரதி மைந்தன்