பிரதமர்

பிரதமர் ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிரதமர் ரணில் விக்ரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்தது.

கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோணவல இதனைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த முறை பரிசீலிக்கப்பட்ட போது, அதற்கு அடிப்படை எதிர்ப்பை வெளிப்படுத்திய பிரதமர் தரப்பு சட்டத்தரணிகள், இந்த மனுவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான மூலாதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்பதால், இது குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு இல்லை என்று சுட்டிக்காட்டினர்.

இதனை கருத்தில் எடுத்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரர்கள் குழாம், இன்று தமது பதிலை வழங்குவதாக அறிவித்திருந்தது.

இதன்படி இன்று இந்த மனு பரிசீலனைக்கு வந்த போது, அதனை நிராகரிகரிப்பதாக அறிவித்தது.

இதேவேளை நிராகரிக்கப்பட்ட இந்த மனுவை தாம் மீண்டும் உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்கவிருப்பதாக, மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோணவல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரச நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக இருக்க முடியாது என்று தெரிவித்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தொடர்ந்திருந்த வழக்கினை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த மாதம் 30ம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளது.

முன்னைய அரசாங்க காலப்பகுதியில், டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு நூதன சாலை நிர்மாணத்திற்கு 34 மில்லியன் ரூபாய் அளவான அரச நிதி பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …