பயங்கரவாதிகளுடன்

பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் சற்றுமுன்னர் அதிரடியாக கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுதாரிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் இன்று (திங்கட்கிழமை) அம்பாறை – கல்முனையில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களுடனும் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இவர்கள் புலனாய்வுப் பிரிவுகளால் கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

எனவே கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …