சோமாலியாவில் அமெரிக்க யுத்த வாநூர்தி மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
புண்லண்ட் மாகாணத்தில் உள்ள கோலிஸ் மவுண்டனிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் இதே பிரதேசத்தில் இடம்பெற்ற பிறிதொரு வான் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள், புதிதாக தமது சட்டவிரோத குழுவிற்காக அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை முன்னர் இணைத்து வந்ததாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், கடந்த இரண்டு வருடங்களில் 800 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.