யாழில்

யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி.. மேலும் ஒருவர் படுகாயம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வேன் ரக வாகனம் ஒன்றும், துவிச்சக்கரவண்டியொன்றும் மோதி நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த 49 வயதான அதே பகுதியை சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார்.

துவிசக்கரவண்டியை செலுத்தியவர் படுகாயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இதேவேளை, சிலாபம் கொழும்பு பிரதான வீதியில் வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற மேலும் ஒரு வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

தனியார் பேருந்து ஒன்று, கொள்கலன் பாரவூர்தியொன்றை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிர் திசையில் பயணித்த உந்துருளியுடன் மோதி நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உந்துருளியை செலுத்திய 36 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி.. மேலும் ஒருவர் படுகாயம்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …