அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது டெடனேட்டர் மற்றும் ஜெலிக்நைட் குச்சிகள் உள்ளிட்ட ஆயுத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
200 டெடனேட்டர்கள், 200 ஜெலிக்நைட் குச்சிகள் என்பன மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ரி56 ரக துப்பாக்கிகளும், மெகசீன்கள் மற்றும் இரண்டு கைதுப்பாக்கிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.