பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 81 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
6.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக ஏற்பட்ட கட்டட இடிபாளுகளுக்குள் 30 பேரளவில் சிக்கியிருக்கலாம் என்றும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.