பயங்கரவாத தடை தொடர்பான சரத்து மாத்திரம் உள்ளீர்க்கப்பட்டு, நேற்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டத்தின்கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டினதும், நாட்டு மக்களினதும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, காவல்துறையினருக்கும், இராணுவதினருக்கும் அதிகாரத்தை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று இரவு 8 மணிமுதல் இன்று அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.