விமான நிலைய

விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு  விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் விமான நிலையத்துக்கு  காணப்பட்ட அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு அதன் பாதுகாப்பு விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந் நிலையிலேயே விமானப்படையின் நடமாடும் சோதனைப் பிரிவு நேற்று இரவு 10.15 அளவில்  சோதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த ஒருங்கிணைக்கப்பட்ட பி.வீ.சி. குழாய்க் குண்டு மீட்கப்பட்டதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் கிஹான் செனவிரதன வீரகேசரிக்கு தெரிவித்தார்.

இந் நிலையில் அதனை விமானப்படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர்.

தொடர்ந்தும் விமான நிலையத்துக்கு குண்டு அச்சுறுத்தல் உள்ள நிலையில் விமானப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்ப்ட்டுள்ளது.

LIVE UPDATES : குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகள்

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …