தைவானில்
தைவானில்

தைவானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று உள்ளூர் நேரடிப்படி மதியம் 1 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தலைநகர் தைபே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

ஹுயாலியன் நகரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக கடலில் மேற்பரப்பில் சில மாற்றங்களை உணர்ந்ததாக ஜப்பான் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …