நல்லூரில் தியாக தீபம் சிலை விவகாரம்: கஜேந்திரனிடம் 3 மணி நேரம் பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் அவரது உருவச்சிலை வைக்கப்பட்டமை தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனிடம் பொலிஸார் சுமார் மூன்று மணி நேர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் கஜேந்திரன் எம்.பி. இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவரிடமிருந்து விரிவான வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த செல்வராசா கஜேந்திரன், தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதைப் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல் எனச் சித்தரிக்கப் பொலிஸார் முனைவதாகக் குற்றம்சாட்டினார்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான நினைவேந்தும் உரிமையை முற்றிலும் மறுக்கும் நோக்கத்துடனேயே அரசும் பொலிஸாரும் இத்தகைய விசாரணைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *