நாம்

நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை என்று கூறி நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.

அந்த கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட பேப்பர்கள் ஓட்டுவது வழக்கம்.

அப்படி ஓட்டப்பட்ட நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்று அந்த கட்சி புகார் தெரிவித்தது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு எந்த பலனும் இல்லை.

இந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னம் தெளிவாக இருக்கு மாறு செய்ய தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அந்த கட்சியின் பொதுச் செயலாளர் என்.சந்திரசேகரன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. #NaamThamizharKatchi #LokSabhaElections2019

About அருள்

Check Also

திமுக

அடிச்சு தூக்கிய திமுக வாரிசுகள்: வெற்றி கோட்டையான சென்னை!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesதிமுக வாரிசுகள் மக்களவை தேர்தலில் சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளது. தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், …