ரஜினி பட இயக்குனரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நேற்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் போட்ட ஒரு டுவீட்டால் அஜித் ரசிகர்கள் அவரை டிவிட்டரில் வருத்தெடுத்து வருகின்றனர்.

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் ரஜினியை வைத்து பேட்ட எனும் ஹிட் படத்தை கொடுத்தார்.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று சன்.டி.வியில் பேட்ட படத்தை போட்டிருந்தார்கள்.

அதே நேரம் நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்க்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது.

இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டரில், தலைவர் மற்றும் தல ஆட்டம் ஒரே நேரத்தில் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

#Thalaivar #Thaladhoni என குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்து கடுப்பான அஜித் ரசிகர்கள் பலர் அவர் டிவிட்டரில் கண்டமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.

சிலர் தகாத வார்த்தைகளாலும் கேவலமான மீம்ஸ்களாலும் அவரை திட்டி வருகின்றனர்.

About அருள்

Check Also

வானில் இருள்

இன்று சென்னையில் இருள், நாளை அஜித்தின் வானில் இருள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!இன்று சென்னையில் திடீரென வானில் இருள் தோன்றி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மழையையே கிட்டத்தட்ட …