சாய்பல்லவி
சாய்பல்லவி

சாய்பல்லவியுடன் திருமணமா? மனம்திறந்த விஜய்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகை சாய் பல்லவியை இரண்டாவதாக திருமணம் செய்யவுள்ளதாக வெளியான செய்தி குறித்து இயக்குனர் விஜய் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஏ.எல்.விஜய். இவர் நடிகர் விஜய்யை வைத்து ‘தலைவா’, அஜித்தை வைத்து ‘கிரீடம்’, விக்ரமை வைத்து ‘தெய்வத்திருமகள்’ ஆர்யாவை வைத்து ‘மதராச பட்டினம்’, ஜெயம் ரவியுடன் ‘வனமகன்’,என பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

அதனை தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட படங்களை இயக்கிவருகிறார்.

சாய்பல்லவி
சாய்பல்லவி

ஏ.எல். விஜய்க்கும் அமலாபாலுக்கும், ‘தலைவா’ படத்தில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதற்கிடையே இயக்குநர் விஜய்க்கு சாய்பல்லவியுடன் இரண்டாவது திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் கடந்த சில நாட்களாக உலா வந்தன.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த விஜய், அது முற்றிலும் பொய்யான செய்தி, யாரோ வதந்தியை கிளப்பிவிட்டுள்ளனர் என அவர் கூறினார்.

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …