தமன்னா
தமன்னா

முதல்முறையாகத் தனியாகக் களமிறங்கும் தமன்னா!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமன்னா தமிழில் ‘தேவி-2’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, இந்தியிலும் படங்கள் கைவசம் உள்ளன.

இந்தநிலையில், தமன்னா முதல்முறையாக ஹீரோ இல்லாத படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அதே கண்கள்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்தை சி.வி.குமார் தயாரித்திருந்தார்.

முதல் பட வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது படத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்திவந்த வெங்கடேசன், ஹாரர் ஜானரைக் கையில் எடுத்திருக்கிறார்.

வெங்கடேசன் சொன்ன கதையைக் கேட்ட தமன்னா, அதில் தானே நடிப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஹீரோ ரோல் கிடையாது என்றும், படம் முழுக்க முழுக்க தமன்னாவின் கதாபாத்திரத்தைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்கிறார்கள். தமன்னாவுடன் யோகி பாபுவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

About அருள்

Check Also

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது - அனுஷ்கா

பட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா மாதவனுடன் அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படம் அடுத்த …