தமிழகத்தில்
வைகோ

உதயசூரியனில் மதிமுக வேட்பாளர்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தமிழகத்தில் சுமார் 20 வருடங்கள் அரசியல் கட்சி நடத்தி வரும் வைகோ, திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதிக்கு ஒப்புக்கொண்டது குறித்து மதிமுகவினர்களே விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக

வைகோ அறிவித்திருந்தார் இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளார்.

ஒருசில மாவட்டங்களில் மட்டுமே வாக்கு சதவீதம் வைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியே ஒரு தொகுதியில் தைரியமாக ‘பானை’ சின்னத்தில் போட்டியிடும்போது,

தமிழகம் முழுவதும் வாக்கு சதவிகிதத்தை வைத்துள்ளதாக கூறப்படும் வைகோவின் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு பதிலாக கட்சியை திமுகவுடனே இணைத்துவிடலாமே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றாலும் மதிமுகவின் கணேசமூர்த்தி திமுக எம்பியாகவே கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தயாநிதி அழகிரி உள்ளிட்ட சிலர் மதிமுக திமுகவுடன் விரைவில் இணைந்துவிடும் என்று கூறி வரும் நிலையில், வைகோவின் இந்த முடிவு அதனை உறுதி செய்வதுபோல் தோன்றுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

About அருள்

Check Also

திமுக

அடிச்சு தூக்கிய திமுக வாரிசுகள்: வெற்றி கோட்டையான சென்னை!!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Sharesதிமுக வாரிசுகள் மக்களவை தேர்தலில் சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளது. தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், …