தீப்பற்றி எரியும் கப்பல்

கடலில் மூழ்கிய 2000 விலையுயர்ந்த கார்கள்: அதிர்ச்சி தகவல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அட்லாண்டிக் பெருங்கடலில் 2000 கார்களுடன் சென்று கொண்டிருந்த கப்பல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்து கடலில் மூழ்கியதால் அதில் இருந்த 2000 விலை உயர்ந்த கார்களும் கடலில் மூழ்கியது.

இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது கடந்த செவ்வாய் அன்று இத்தாலி நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக சென்று கொண்டிருந்தது.

அந்த சரக்கு கப்பலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 2000 ஆடம்பர கார்கள் இருந்தன.

இந்த நிலையில் பிரான்ஸ் கடல் எல்லைக்கு 150 மைல்கள் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக கப்பல் தீப்பற்றி எரிய தொடங்கியது
தீயை அணைக்க கப்பலில் இருந்த ஊழியர்கள்

பெரும் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. கப்பல் தீப்பற்றி எரியும் தகவல் அறிந்தவுடன் மீட்புப்படையினர் விரைந்து கப்பலில் இருந்த 27 ஊழியர்களை காப்பாற்றினர்.

இருப்பினும் ஆடி கார் உள்பட விலையுயர்ந்த கார்களை காப்பாற்ற முடியவில்லை.

இந்த கப்பல் மூழ்கிய கடல் பகுதி சுமார் 15ஆயிரம் அடி ஆழம் என்பதால் கடலில் மூழ்கிய கப்பல்களை மீட்க வழியே இல்லை என்று கூறப்படுகிறது.

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …