கேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்று அம்மாநில காங்கிரஸ் எம் எல் ஏ.பி.சி. ஜார்ஜ் கூறியுள்ளார்.
கேரளவில் தமிழ் படங்களுக்கு வரவேற்பு அதிகம். விஜய்யின் படங்களுக்கு இன்னும் அதிகம். மலையாள நடிகர்களுக்கு இணையான வரவேற்பு விஜய்க்கு எப்போதும் உண்டு. சமீபத்தில் வெளியான சர்கார் படத்தின் போதுகூட இந்திய நடிகர்களிலேயே உயரமாக, விஜய்க்கு 175 உயரத்தில் கட் அவுட் எல்லாம் வைத்து அசத்தினார்கள்.
