நக்கீரன் கோபால்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நக்கீரன் கோபால் கைது?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும் என போராடி வருகின்றனர்.

பொள்ளாச்சி விவகாரம் இவ்வளவு பெரிய விஷயமானதற்கு நக்கீரனில் வெளிவந்த வீடியோ ஒரு முக்கிய காரணம். இதன் பின்னர்தான் அரசியல்வாதிகள், திரையுலகினர், சமூக நல ஆர்வலர்கள், சமூக வலைத்தள பயனாளிகள் என அனைவரும் இந்த பாலியல் கொடுமையை எதிர்த்து கொதித்தெழுந்தனர்.

இந்த வழக்கை அரசியலாக்க கூடாது என கூறினாலும், திமுகவின் முழு ஆதரவாளரான நக்கீரன் கோபால், தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே திமுகவுக்கு சாதகமாக இந்த விஷயம் அமைய திட்டமிட்டு வீடியோவை வெளியிட்டதாக ஒருசிலர் கூறி வருகின்றனர்.

இதற்கேற்ப தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரும் அமைந்திருக்கிறது. இதன் அடைப்படையில் நக்கீரன் கோபாலை போலீசார் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றன.

ஏற்கனவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக நக்கீரன் கோபாலுக்கு சமன் அனுப்பட்டு இருந்தது. இந்த சம்மனை ஏற்று நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். விளக்கத்திற்கு பிறகும் நக்கீரன் கோபாலை போலீசார் கைது செய்ய தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!8Sharesதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க …