ஜப்பான்

5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான 5.3 டன் பொருட்களுடன் ஜப்பான் நாட்டு விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச நிலையத்தை நிறுவி ஆராய்ச்சி செய்து வருகின்றன.

சுழற்சி முறையில் அங்கு வீரர்கள் தங்கி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான பொருட்கள், விண்கலன்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மின் கலன்கள், இதர உபகரணங்களுடன், கோனோட்டரி 8 என்ற ஆளில்லா விண்கலத்தை ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜக்சா விண்ணில் ஏவியது.

தென் மேற்கே உள்ள தனேகஷிமா ஏவுதளத்தில் இருந்து H-2B ராக்கெட் மூலம், கோனோட்டரி 8 விண்ணில் ஏவப்பட்டது.

விண்ணில் ஏவப்பட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு, ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்தது.
விழுந்து நொறுங்கியது மிக்-21 போர் விமானம்..

About அருள்

Check Also

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share  இத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் …