குண்டு வெடிப்புக்களினால் இதுவரை 290 பேர் பலி

குண்டு வெடிப்புக்களினால் இதுவரை 290 பேர் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 வரையில் அதிகரித்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அதியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் காயமடைந்தவர்கள் 500 பேர் வரையில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரச சேவையாளர்களுக்கு இன்றைய தினம் விடுமுறை வழக்கப்படவில்லை எனவும் அனைவரும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களை தொடந்தும் இயக்கச் செய்வதற்காக அனைத்து அரச பணியாளர்களும் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக தெரிவித்துள்ளார்.

ஏற்பட்டுள்ள அவசர நிலை தொடர்பில் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடுகிறது.

இதேவேளை, நேற்றைய தினம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், காத்தான்குடி மற்றும் மாவநெல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் தம்புள்ளையில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் கைதான 24 பேரிடமும் சீ.ஐ.டி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …