திமுகவில் இணைந்த 20,000 ரஜினி ரசிகர்கள்: கலகலத்ததா ரஜினி மக்கள் மன்றம்!?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ரஜினி ரசிகர்கள் 20,000 பேர் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட காலமாகவே அரசியலுக்கு வருகிறேன் என கூறிவந்த ரஜினி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னும், கருணாநிதி உடல்நிலை நலிவுற்ற பின்னும் தன் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார்.

சினிமாவில் அவரது சக போட்டியாளரான கமலும், அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்து கட்சி துவங்கிவிட்டார்.

ஆனால் ரஜினி இன்னும் அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியை துவங்கவில்லை. ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் சமூக பணிகள் சிலவற்றில் ஈடுபட்டு வருகிறது ரஜினி தரப்பு.

இன்னும் எத்தனை காலம்தான் கட்சி ஆரம்பிப்பார் என காத்திருப்பது என்று ரஜினி ரசிகர்கள் பலர் வெவ்வேறு அரசியல் கட்சிகளை நாடத் துவங்கியுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி ரசிகர்கள் 20 ஆயிரம் பேர், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதன்மூலம் ரஜினியின் அரசியல் பாதையில் சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் ரஜினி மக்கள் மன்றமே கலைக்கப்படும் ஆபத்தான சூழலில் உள்ளது. என்ன செய்யப் போகிறார் ரஜினி?

About அருள்

Check Also

ரஜினிகாந்த்

என் மீது நம்பிக்கை வையுங்கள், அது வீண்போகாது: ரஜினிகாந்த் பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!12Sharesசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை …