2019 ஆம் வருடத்திற்கான நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாதீட்டு யோசனைக்கு அமைய வௌிநாட்டு கடவுச் சீட்டு வௌியீட்டின் போது அறவிடப்படும் கட்டணம் நாளை தொடக்கம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி , 3000 ரூபாவாக காணப்படும் சாதாரண சேவை கட்டணம் 3500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு வௌியிடப்படும் போது 10 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.