இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட 8 பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.
ரொயிட்டர் செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரானில் இயங்கும் அந்த அமைப்பின், அமாக் எனும் ஊடக பிரிவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையினுள் மேலும் குண்டு தாக்குதல்களை நடத்த தேசிய தவுஹித் ஜமாத் அமைப்பு தயாராகி வருவதாக இந்திய அதிகாரிகள், இலங்கைக்கு அறிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் 321 பேர் பலியானமைக்கு காரணமாக அமைந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பே காரணம் எனவும் குறித்த செய்தி தளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்த்தவ தோவாலயங்கள் மற்றும் நட்சத்திர விருந்தகங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் இதுவரை 321 பேர் பலியாகியுள்ளதுடன், 400 இற்கும் அதிகமானோர் காயமடைந்து தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.