வெடி குண்டுகளை தயார் செய்த தொழிற்சாலை

வெடி குண்டுகளை தயார் செய்த தொழிற்சாலை இதுவா? படங்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உயிர்த்த ஞாயிறான கடந்த 21 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதல்களுக்கு வெடி குண்டுகள் தயார் செய்யப்பட்ட தொழிற்சாலை தொடர்பான புகைப்படங்களை டெய்லி மெய்ல் செய்தி சேவை வெளியிட்டுள்ளது.

வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள செப்பு தொழிசாலையிலேயே குறித்த தாக்குதல்களுக்கான வெடி குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் குறித்த தொழிற்சாலையில் கடமையாற்றிய முகாமையாளர் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தொழிற்சாலை காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தொழிற்சாலை, தற்கொலை குண்டுதாரி ஒருவருடையது என தெரியவந்துள்ளது.

குண்டு வெடிப்பு – பாதுகாப்பு துறையில் அதிரடி மாற்றங்கள் !

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …