இந்தியா

வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம் பூர்த்தி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நாட்டையே உலுக்கிய 8 இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இன்றுடன் ஒரு வார காலம் பூர்த்தியாகின்றது.

கடந்த 21 ஆம் திகதி காலை 8.45 முதல் 9.30 வரையான காலப்பகுதியில் கொச்சிக்கடை புனித அந்தோனியார்,

மட்டக்களப்பு சீயோன் மற்றும் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் ஆகிய தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அத்துடன் கொழும்பு சங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் கொள்ளுப்பிட்டிய சினமன் கிரேன்ட் ஆகிய விருந்தகங்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதுடன் பாதுகாப்பு தரப்பினர் தெமட்டகொடை பகுதியில் தேடுதல் மேற்கொண்ட போது வீடொன்றில் வெடிப்பு சம்பவம் பதிவானது.

அன்றைய தினம் பிற்பகல் 1.45 அளவில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் தெஹிவளை மிருககாட்சி சாலைக்கு அருகில் உள்ள விருந்தகம் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டார்.

இந்த தாக்குதல்கள் காரணமாக 359 பேர் பலியானதாக கூறப்பட்ட போதும் கடந்த 25 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்ட சுகாதார அமைச்சு 253 பேர் மாத்திரமே பலியானதாக அறிவித்திருந்தது.

ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கை

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …