நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, வெடிப்பு சம்பவங்களால் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனுடன் சுமார் 500 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது நாடாளாவிய ரீதியில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.