விசேட தெரிவுக்குழுவின் சாட்சி

விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பமாகின.

நாடாளுமன்ற குழு அறை இலக்கம் 3இல் இன்று முற்பகல் ஆரம்பமான தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகளை அறிக்கையிட ஊடகங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தெரிவுக்குழுவில், பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட முதலாவது நபராக சாட்சியமளித்தார்.

தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியினால், பாதுகாப்புச் செயலாளரிடம் சாட்சி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமான சாட்சி விசாரணைகள் பிற்பகல் ஒரு மணிவரை இடம்பெறவுள்ளது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …