தற்கொலை

விசாரணைகளை ஆரம்பித்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்புடைய ஒரு முக்கிய சந்தேகத்துக்குரியவரைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், அவர் மக்காவுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலை அடுத்து அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் என தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலைத் திட்டமிட்ட 8 முக்கியமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

About அருள்

Check Also

தாக்கப்பட்டாரா அர்ச்சுனா எம்.பி – நாடாளுமன்றத்தில் களேபரம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தம்மைத் தாக்கியதாக யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள வைத்தியர் ராமநாதன் …